தாயகம் திரும்பிய தமிழனின் உணர்ச்சிப்பூர்வமான முதல் வார்த்தை இதுதான்.!

தாயகம் திரும்பிய தமிழனின் உணர்ச்சிப்பூர்வமான முதல் வார்த்தை இதுதான்.!



the-first-word-spoken-by-abhinandan

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட, இரண்டு நாட்கள் அங்கு இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். வாகா எல்லையில் அவர் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மொத்தமாக தணிந்து இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எங்களுக்கு போரின் மீது விருப்பம் இல்லை என்று நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார். இந்த நிலையில் அந்நாட்டில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானியை விடுவிக்க போவதாகவும் கூறினார். தற்போது அதேபோல் அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். 

Abhinandan

பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின் அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பாக். ராணுவ பாதுகாப்புடன் வாகா எல்லை கொண்டு வரப்பட்டார். லாகூரிலிருந்து அவர் கார் மூலமாக, வாகா எல்லை அழைத்துவரப்பட்டார். இதையடுத்து இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இந்திய தூதரக அதிகாரிகளின் துணையுடன் அவர் இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தார். 

இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் அபிநந்தன் கூறிய முதல் வார்த்தை "தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி" என்பதுதான் என அமிர்தசரஸ் துணை காவல் ஆணையர் ஷிவ் துளர் சிங் திலோன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.