இறந்தவரின் உடலிற்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு சோகத்தில் இருந்த குடும்பம்!. 15 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!.The family that was in the tragedy after the death of the deceased's body


கேரளாவில் வயநாடு அருகில் உள்ள ஆடிகொள்ளி பகுதியைச் சேர்ந்த சஜி என்பவர், வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்வதாக கூறி சென்று நீண்ட நாட்களாக வீடு திரும்பவியலை, இதனால் அவர் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் செய்தனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பைரகுப்பா என்ற பகுதியில் சஜியை பார்த்ததாக சிலர் அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியுடன் இருந்த குடும்பத்தினருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது,  பைரகுப்பா காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கூறியுள்ளனர்.

அந்த உடலை பார்த்து சஜியின் சகோதரர், இது சஜியின்உடல்தான் என்பதை உறுதியாகச் சொன்னார். முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்த உடலின் காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம் தெரிந்தது.

இதனைத்தொடர்ந்து, அவரின் உடலை அப்பகுதி தேவாலய கல்லறையில் புதைத்து விட்டனர். 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் சஜி உயிரோடு வீட்டிற்கு வந்துள்ளார்.

அவரைக் கண்டதும் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி. மேலும் சஜி என்று நினைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட அந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.