சகோதரியை குத்திக்கொலை செய்த தம்பி: மனநலம் பாதிக்கப்பட்டவரின் பகீர் செயல்.!



The brother who stabbed his sister to death

ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாள் மாவட்டம் சிர்மார், மோகலா பகுதியைச் சார்ந்த 25 வயதுடைய இளம்பெண் முஸ்கான். இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட்டில் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். 

இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், அவரது சகோதரர் பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. 

ஹரியானா கிரைம்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.