டிசி வாங்க வந்த மாணவனை அலைக்கழித்த நிர்வாகம்... தீக்குளித்து கல்லூரி முதல்வரையும் கட்டி பிடித்த மாணவன்...!

டிசி வாங்க வந்த மாணவனை அலைக்கழித்த நிர்வாகம்... தீக்குளித்து கல்லூரி முதல்வரையும் கட்டி பிடித்த மாணவன்...!


the-administration-chased-the-student-who-came-to-buy-d

டிசி வாங்க வந்த மாணவனை அலைகழித்ததால், தன் மீது தீ வைத்துக்கொண்டு பள்ளி முதல்வரை கட்டிபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாதில் உள்ள பிரபல கல்வி குழுமமான நாராயணா கல்வி குழுமத்தின் கிளை கல்லூரி  ராமாந்தபூரில் இயங்கி வருகிறது. அங்கு 12-ஆம் வகுப்பு முடித்த மாணவன் நாராயண சுவாமி, மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். சில நாட்களாக தன்னுடைய மாற்று சான்றிதலுக்காக அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் அலைகழித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டி கடந்த வருடத்திற்கான கல்வி கட்டணத்தை செலுத்தினால் தான் மாற்று சான்றிதழ் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

பணம் செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்த நாராயண சுவாமி நேற்று மதியம் முதல்வர் சுதாகர் ரெட்டி அறைக்கு சென்று தயாராக வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டியை கட்டிப்பிடித்து கொண்டார். இதனால் இரண்டு பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. கல்லூரி முதல்வர் அறையில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற ஆசிரியர்கள் தீயை அணைத்தனர்.

உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். பிறகு இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ராமானந்தபூர் காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.