உலகம் லைப் ஸ்டைல்

பட்டப்பகலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்த பெண்கள் கூட்டம்.!! விஷயம் வெளியே வந்ததும் காத்திருக்கும் அதிர்ச்சி..

Summary:

பொதுவெளியில் நிர்வாண வீடியோ எடுத்த குற்றத்திற்காக வெளிநாட்டை சேர்ந்த  பெண்கள் சிலரை த

பொதுவெளியில் நிர்வாண வீடியோ எடுத்த குற்றத்திற்காக வெளிநாட்டை சேர்ந்த  பெண்கள் சிலரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள நாடுகளில் துபாயும் ஒன்று. இந்நிலையில் துபாயில் பெண்கள் சிலர் கூட்டமாக வீட்டின் பால்கனியில் நிர்வாணமாக நின்றபடி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் கடந்து சனிக்கிழமை வெளியான ஒரு காணொளி மூலம் துபாய் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

உடனே அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை கைது செய்துள்ளனர். அதில் 11 பெண்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பை ஏற்பாடு செய்த ஒரு ரஷ்யரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில், பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாத காலம் வரை சிறை தண்டணையும், 5,000 திராம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள துபாய் போலீசார், "ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருபவர்கள் அல்லது அந்நாட்டில் வாழ்பவர்கள், அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் எனவும், இதுபோன்று நடந்துகொள்வது எங்கள் நாட்டு சட்டத்திற்கு மிகவும் எதிரானது எனவும் கூறியுள்ளனர்.


Advertisement