மூணாறு நிலச்சரிவு.. அழுகிய நிலையில் மேலும் 16 உடல்கள் மீட்பு.! பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு.!

மூணாறு நிலச்சரிவு.. அழுகிய நிலையில் மேலும் 16 உடல்கள் மீட்பு.! பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு.!



Terrible-landslide-near-Munnar-16-more-bodies-recovered

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 7-ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் 20 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. அவ்வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 78 பேரும் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

அதில் 3 பேர் மட்டும் உயிர் தப்பித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து 
தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதில் தீயணைப்பு துறையினர் 13 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். பலியான 17 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

2வது நாளாக நேற்று முன் தினம் 
மண்ணுக்குள் புதைந்த கிடந்த மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடுமையான மழையிலும் 3-வது நாளாக நேற்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைப்பெற்றது. மேலும் 2 மோப்பநாய்களின் உதவியுடன், பொக்லைன் எந்திரம் மூலம் 16 உடல்களை தோண்டி மீட்டனர்.