இந்தியா

என் கடவுளே அவர்தான்.. கோவில் கட்டி வணங்கும் பரம பக்தர்! மத்திய அரசிடம் விடுத்த பலே கோரிக்கை!

Summary:

telungana man build temple for donald trumb

தற்காலத்தில் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக,  அவர்கள் நலமாக வாழவேண்டும் என்பதற்காக கோவில் கட்டி அபிஷேகம் செய்து வரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. முதலில் நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். பின்னர் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டினர். தற்போது அதனையும் தாண்டி தெலுங்கானாவை சேர்ந்த புஸ்ஸாகிருஷ்ணா என்ற நபர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு கோயில் கட்டி பூஜை செய்து வருகிறார். 

தெலுங்கானாவை சேர்ந்த அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிரம்ப்  கனவில் தோன்றினாராம். அதனை தொடர்ந்து அவரது வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் புஸ்ஸா கிருஷ்ணா தனது வீட்டிற்கு அருகில் 6 அடியில் டிரம்பிற்கு சிலை வைத்து வணங்கி வருகிறார். மேலும் அதற்கு வெள்ளிக்கிழமைதோறும் விரதம் இருந்து கடவுளை போல் நினைத்து பூஜை செய்தும் வருகிறார். 

இது குறித்து புஸ்ஸா கிருஷ்ணன் கூறுகையில்,  இந்திய அமெரிக்க உறவு நல்லதொரு உறவாக நீடிக்கவேண்டும். மேலும் டொனால்டுடிரம்ப் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக வெள்ளிக் கிழமைதோறும் விரதமிருந்து வழிபட்டு வருகிறேன். நான் வேலைக்கு செல்லும்போது டொனால்ட் ட்ரம்ப் புகைப்படத்தை தன்னுடன் எடுத்துச் செல்கிறேன்.எனது வீட்டின் அருகில் உள்ள தனது சிலையை 15 தொழிலாளர்களைக் கொண்டு ஒரு மாதத்திலேயே கட்டி முடித்தேன் என்று கூறியுள்ளார். 

மேலும் புஸ்ஸா கிருஷ்ணன் என்ற பெயர் போய் தற்போது அனைவரும் அவரை டிரம்ப் கிருஷ்ணா, அவரது வீட்டை டிரம்ப் ஹவுஸ்  என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் புஸ்ஸா கிருஷ்ணன் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை  சந்திக்கவேண்டும் தனது கனவை அரசு நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 


Advertisement