மாமியாரை துடைப்பத்தால் நொறுக்கியெடுத்த மருமகள்; மகனின் தரமான செயல்.!



Telangana Yadadri District Daughter In Law beat Mother In Law 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தை சேர்ந்த வயோதிக பெண்மணி லக்ஷ்மம்மா.

இவரின் மூத்த மருமகள் பத்மா. மாமியார் - மருமகள் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரியவருகிறது. 

இந்நிலையில், சம்பவத்தன்று மூத்த மருமகள், தனது மாமியாரை துடைப்பம் கொண்டு கடுமையாக தாக்கி இருக்கிறார். 

இதனை பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் வீடியோ எடுத்து லக்ஷ்மியம்மாவின் இளைய மகனுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.