பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த கணவர் கூலிப்படை ஏவி கொலை: மனைவி பகீர் செயல்.!Telangana Wife Killed Husband after Change Gender by Sex SUrgery 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட் பகுதியைச் சார்ந்த நபருக்கு, திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கணவர் பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து, தம்பதிகளிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகள், சமீபத்தில் நேரில் சந்தித்துக் கொண்டதாக தெரியவருகிறது. 

அப்போது இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் மனைவி தனது கணவரை இரண்டு கூலிப்படை நபர்கள் ஏற்பாடு செய்து கொலை செய்தார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் உண்மையை அறிந்த அதிகாரிகள், இளம்பெண் மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.