வாணி போஜனா இது.. சேலையில் குடும்ப குத்து விளக்காக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை.!
58 வயது பெண் கற்பழிப்பு, கொலை.. கணவனுக்கு சரக்கு.. கதறக்கதற நடந்த பயங்கரம்.!!
58 வயது பெண் கற்பழிப்பு, கொலை.. கணவனுக்கு சரக்கு.. கதறக்கதற நடந்த பயங்கரம்.!!

58 வயது பெண்ணின் கணவருக்கு மதுவை ஊற்றிவிட்டு, அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலையை அரங்கேற்றி நகை, பணம் கொள்ளையடித்து சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், தாரமதிப்பட்டே கிராமத்தை சார்ந்த பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக இருப்பதாக அப்துல்லாபூர்மேட் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், வீட்டில் மேற்கொண்ட சோதனையில் நகைகள், பணம் கொள்ளைபோனது உறுதியானது. கடந்த நவ. 22 ஆம் தேதி இந்நிகழ்வு நடந்த நிலையில், கொலையான பெண்மணி 58 வயதுடையவர் என்பதும், அவருக்கு கணவர் இருக்கிறார் என்பதும் விசாரணையில் உறுதியானது. பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக 23 வயது நபர், 30 வயது நபர் என 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 2 இளைஞர்களும் இதே கிராமத்தை சார்ந்தவர்கள் தான் என்பதும் உறுதியானது.
நண்பர்களாக இருந்து வந்த சுரேஷ் (வயது 30) மற்றும் ஸ்ரீகாந்த் (வயது 23) ஆகியோர் கடந்த நவ. 23 ஆம் தேதி முதலில் பெண்ணை சந்தித்துள்ளனர். பெண்மணி வெளியே சென்று வீட்டிற்கு வருகையில், அவருக்கு உதவி செய்வது போல நடித்து வீட்டிற்குள் வந்து நோட்டமிட்டு சென்றுள்ளனர். பின்னர், அவரது கணவரை அழைத்து சென்று மதுபானம் வாங்கி குடிக்கவைத்த நிலையில், ஒருசமயத்தில் கணவருக்கு இரண்டு பேரும் சேர்ந்து எதோ விபரீதம் செய்யப்போவதாக தோன்றியுள்ளது.
அவர்களின் பிடியில் இருந்து கணவர் தப்பிச்செல்ல முயற்சித்தபோதும், அது பலனளிக்கவில்லை. இறுதியாக வீட்டிற்கு புறப்பட்டு சென்ற 2 இளைஞர்களும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். பெண் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த இளைஞர்கள் இருவரும் ஹைதராபாத் நகரில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான பெண்ணின் மகன் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.