9 வயதில் நடக்கும் சோகமா இது?.. நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பால் சிறுவன் துடிதுடிக்க மரணம்.!Telangana Minor Boy Died Heart Attack 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள Jagtial மாவட்டம், தரூர் பகுதியை சேர்ந்தவர் கங்காதர். இவரின் மகன் பாலே ஹர்ஷித். சிறுவன் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். 

சம்பவத்தன்று சிறுவன் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த சிறுவன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி அலறியபடி மயங்கி இருக்கிறார்.

இதனால் பதறிப்போன உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனின் மரணத்தை உறுதி செய்தனர். 

இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவிலேயே சிறுவனின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.