செல்பி எடுக்க முயன்று அணையில் விழுந்த மகன், மகள்... குழந்தைகளை மீட்கச்சென்ற தந்தை பரிதாப பலி.!Telangana Kareem nagar District Man Drowned into Water 


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் மாவட்டம், ராம் நகரில் வசித்து வருபவர் விஜயகுமார் (47). இவர் ஆசிபாபாத் மாவட்டத்தில் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது குடும்பத்தினருடன் பொட்டலப்பள்ளி, ராஜராஜேஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார். 

பின் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பும் நேரத்தில், எல்.என்.டி நீர்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அணையில் விஜயகுமாரின் மகன் விக்ராந்த், மகள் சைநித்யா ஆகியோர் நீருக்கு மிக அருகில் நின்றவாறு செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர். அச்சமயம் இருவரும் நீரில் தவறி விழுந்துள்ளார். 

குழந்தைகள் மீட்பு, தந்தையை பலி

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமார், பிள்ளைகளை மீட்க அணையில் குதித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமாரின் மனைவி பிரசாந்தி, அவர்களை காப்பாற்றக்கூறி அலறி இருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு வந்த மீனவர்கள், குழந்தைகள் இருவரையும் காப்பாற்றினர்.

இதையும் படிங்க: லைன் மேனுக்கு மின்கம்பத்தில் காத்திருந்த எமன்; உடல் கருகி நடந்த பயங்கரம்.!

ஆனால், இவர்களால் குழந்தைகளை பத்திரமாக மீட்க முயன்ற வேளையில், இவர்களை காப்பாற்ற நீரில் குதித்த விஜயகுமாரை மீட்க முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 

 

 

இதையும் படிங்க: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து பயங்கர விபத்து; 6 பேர் பலி., 6 பேர் படுகாயம்.!