மரக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து.. 11 தொழிலாளர்கள் உடல் கருகி மரணம்..!

மரக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து.. 11 தொழிலாளர்கள் உடல் கருகி மரணம்..!


Telangana Hyderabad Timber Shop Fire Accident 11 Died

குடோனில் தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவர் அங்குள்ள போயகொடா பகுதியில் மரக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மரக்கடையில் சமைத்து சாப்பிட்டு குடோனில் தங்கி இருப்பது வழக்கம். 

நேற்று இரவிலும் தொழிலாளர்கள் பணியை முடித்து சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மரக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ குடோனை ஆட்கொண்ட நிலையில்,  உறக்கத்தில் இருந்த தொழிலாளர்கள் மூச்சுத்திணறி எழுந்தபோதுதான் விபரம் தெரியவந்துள்ளது. 

Telangana

இதனால் குடோனில் இருந்து வெளியேற இயலாமல் தவித்த தொழிலாளர்கள் காப்பாற்றக்கூறி அலறல் சத்தம் எழுப்ப, அதிகாலையில் அவ்வழியே சென்றவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைக்க போராடி அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மேலும், குடோனின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 11 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மரக்கடை உரிமையாளர் சம்பத் குடோன் வைக்க அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ள நிலையில், அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.