கரப்பான் பூச்சி பிரியாணி விநியோகம் செய்த ஹோட்டல் நிர்வாகம்: ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள்.!Telangana Hyderabad Hotel Cockroach Biryani Served 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சம்பவத்தன்று நபர் ஒருவர் பிரியாணி வாங்கி இருந்த நிலையில், அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிட முற்பட்டுள்ளார்.

அப்போது, பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியிருந்தவர் உணவகத்திற்கு வந்து உரிமையாளர் மற்றும் விற்பனை பிரதிநிதிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

அவர்கள் சரிவர பதில் அளிக்காததால், அங்கு இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் ஹைதராபாத் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக ஹோட்டலுக்கு விரைந்து ஆய்வு செய்த அதிகாரிகள், குற்றசாட்டை உறுதி செய்து ரூபாய் 20000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.