பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி 19 மாத குழந்தை பரிதாப பலி; பெற்றோர்களே கவனம்.!Telangana Hyderabad Baby Died 

 

பச்சிளம் குழந்தைகள் வீடுகளில் இருந்தால், மூத்தவர்களை பள்ளிக்கு அனுப்பும்போது, இளையவர்கள் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த 19 மாத குழந்தை ஜபலனா மிதுன். கடந்த வியாழக்கிழமை காலை சிறுமியின் சகோதரர் பள்ளிக்குச் செல்வதற்காக 8:10 மணியளவில் தனது வீட்டு வாசலில் காத்திருந்தார். 

பள்ளி வாகனம் வந்ததும் சிறுமியின் தாய் மகனை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்த நிலையில், வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர், சிறுமியின் தாய் என பலர் இருந்தும் 19 மாத குழந்தை சக்கரத்தின் அடியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. 

வாகனத்தை ஓட்டுநர் இயக்கிய போது சிறுமி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை விட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.