இந்தியா

வீடியோ: அய்யயோ, ஆள விடுங்க..! கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல மறுத்த டிராக்டர் ஓட்டுநர்..! டிராக்டரை ஓட்டிய மருத்துவர்.!

Summary:

Telangana doctor drives tractor to take Covid victims body for last rites

கொரோனால் உயிரிழந்த ஒருவரின் உடலை டிராக்டரில் ஏற்றிச்சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், டிராக்டரை ஓட்ட ஓட்டுநர் பயந்து போன நிலையில் டிராக்டரை தானே ஓடிச்சென்று, உடலை அடக்கம் செய்துள்ளார் மருத்துவர் ஸ்ரீராம்.

தெலங்கானாவின் பெட்டபள்ளி என்னும் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய நகராட்சி ஊழியர்கள் டிராக்டர் ஒன்றை வரவழைத்துள்ளனர்.

ஆனால், டிராக்டரில் இருக்கும் உடல், கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் என்பதால் ட்ராக்ட்டரை ஓட்ட அதன் ஓட்டுநர் பயந்து மறுத்துள்ளார். இந்த தகவல் அந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக செயல்பட்டுவரும் மருத்துவர் ஸ்ரீராம் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே டிராக்டரில் ஏறி, டிராக்டரை தானே ஓடிச்சென்று, உடலை அடக்கம் செய்ய உதவியுள்ளார்  மருத்துவர் ஸ்ரீராம். இதுகுறித்து பேசிய அவர், ஒரு மருத்துவ அதிகாரியாக தனது பணியைத்தான் தான் செய்ததாகவும், அந்த நபர் இறந்து 6 மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டதால் உடனடி நடவடிக்கை தேவை என்பதால் தான் இந்த காரியத்தில் ஈடுபட்டதாகவும்  மருத்துவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் ஒரு மருத்துவர் என்பதையும் தாண்டி, வார இறுதி நாட்களில் விவசாயியாக செயல்பட கூடியவன். அதனால் டிராக்டர் ஓட்டுவதில் எனக்கு சிரமம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மருத்துவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


Advertisement