#HBD Sayyesha: சாக்லேட் பேபி சாயிஷாவுக்கு இன்று குவா., குவா.. டே..! குவியும் வாழ்த்துக்கள்..!
நிஜ துப்பாக்கியுடன் டிக் டாக் வீடியோ..! லைக்ஸ் வாங்க ஆசைப்பட்டு தலை சிதறி உயிர் இழந்த மாணவன்..!
Teen dies as gun accidentally goes off during TikTok shoot in Bareilly

சமூக வலைத்தளங்கள் பல நேரங்களில் நல்ல விஷயங்களுக்கு பயணப்பட்டாலும், சில நேரங்களில் பல உயிர்களை காவு வாங்கும் ஒரு பொருளாகவும் மாறிவருகிறது. அதிலும் குறிப்பாக செல்பி மோகத்தால் பலர் தங்கள் உயிர்களை இழக்கின்றனர். இன்னும் சிலர் அதிக லைக்ஸ் வாங்குவதற்கு ஆசை பட்டு தங்கள் உயிரை இழக்கின்றனர்.
அந்த வகையில், டிக் டாக்கில் அதிக லைக்ஸ் வாங்க ஆசைப்பட்ட உதிர்ப்பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தலையில் துப்பாக்கி வெடித்து, தலை சிதறி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஹபீஸ் எனும் பகுதியை சேர்ந்தவர் கேஷவ். 18 வயதாகும் கேஷவ் 12 ஆம் வகுப்பு படித்துகொண்டறிந்த நிலையில் அவ்வப்போது டிக் டாக் வீடியோ செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கேஷாவின் தந்தை ஆர்மியில் இருப்பதால் அவரது துப்பாக்கி வீட்டில் இருந்துள்ளது.
தனது தந்தை வீட்டில் இல்லாத நேரம், துப்பாக்கியை எடுத்து தனது தலையில் வைத்து சுடுவதுபோல் வீடியோ எடுக்க முயன்றுள்ளார் கேஷவ். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் கேஷவ் தலை சிதறி உயிர் இழந்துள்ளார். டிக் டாக் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு 18 வயது இளைஞர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.