இந்தியா

திடீரென வேலையை விட்டு தூக்கிய பள்ளி! ரோட்டோர வாழைப்பழ வியாபாரியான பள்ளி ஆசிரியர்! வெளியான அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Teacher became as banana seller in lockdown

நெல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வெங்கட சுப்பையா. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். மேலும் 15 வருட  வேலை அனுபவமிக்க இவர் 2 பட்டமேற்படிப்புகளை முடித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், அவர் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு பள்ளி நிர்வாகம் பாதி சம்பளமே கொடுத்து வந்துள்ளது. மேலும் பள்ளிக்கு புதிதாக மாணவர்களை சேர்த்தால் தொடர்ந்து சம்பளம் தரப்படும் என கூறப்பட்டது. இதற்கிடையில் திடீரென அவரை அழைத்த பள்ளி நிர்வாகத்தினர் உங்களது வேலையில் திருப்தியில்லை என கூறி அவரை வேலையை விட்டு நீக்குவதாக கூறியுள்ளனர். 

இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் , குடும்ப கஷ்டத்தை சமாளிக்க வேறு வழியில்லாமல்,  அவர் வாழைப்பழங்களை விற்கத் தொடங்கிவிட்டார். இதுகுறித்து அறிந்த அவரது முன்னாள் மாணவர்கள் சிலர் அவரை வற்புறுத்தி அவருக்கு பணஉதவி செய்துள்ளனர். 

இதுகுறித்து வெங்கட சுப்பையா கூறுகையில் பள்ளி ஆசிரியராக மாதம் 16 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்தேன். தற்போது வாழைப்பழ விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.200 கூட சம்பாதிக்க முடியவில்லை. மிகவும் கஷ்டமாக உள்ளது. ஆனாலும் சம்பளம் குறைவாக இருந்தாலும் மீண்டும் ஆசிரியர் பணிக்கே செல்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார். 


Advertisement