இந்தியா

ஊரடங்கு உத்தரவு! மும்பையிலிருந்து 1000 கிமீ நடந்தே வந்த தமிழக இளைஞர்கள்!

Summary:

Tamilnadu Young man came from mumbai by walk

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவிய நிலையில், தற்போது 3, 374 பேர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சோலாப்பூரில் செயல்பட்டு வரும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர்களது நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என எண்ணிய அவர்கள் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் நடந்து வர முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி தங்களது நடைபயணத்தை மேற்கொண்ட ஏழு இளைஞர்களும் நேற்று மதியம் திருச்சி  வந்தடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவரது உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 


Advertisement