திருமணம் முடிந்து 8 மாதம்..! பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த கணவன் - மனைவி.! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் இந்தியா

திருமணம் முடிந்து 8 மாதம்..! பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த கணவன் - மனைவி.!

தமிழகத்தை சேர்ந்த தம்பதியினர் கேரளாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதாகும் சுதீஷ். இவரது மனைவி ரேஷ்மா என்ற இசக்கிராணி  வயது 25.

8 மாதத்திற்கு முன் திருமணம் செய்துகொண்ட இவர்கள் கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று கணவன் - மனைவி இருவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

சுதிஷ் கழுத்தில் தூக்கு மாட்டியவாறு கயிற்றில் தொங்கி கொண்டிருக்க, அவரது மனைவி ரேஷ்மா கழுத்தில் தூக்கு கயிறு இருந்த நிலையில் தரையில் சடலமாக கிடந்துள்ளார். சுதீஷின் நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு எதார்த்தமாக சென்ற நிலையில் இருவரும் சடலமாக கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி ப்ரெஸ்தபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் தற்கொலை செய்துகொண்டர்களா? தற்கொலைக்கான காரணம் என்ன? அல்லது கொலையா என போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo