உதயமாகிறது! தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்; 3639 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அதிரடி அறிவிப்பு.!

உதயமாகிறது! தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்; 3639 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அதிரடி அறிவிப்பு.!


tamilnadu - central univercity - pjb governmend

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் புதிய மத்தியப் பல்கலைக்கழகம் துவங்க ரூ. 3,639.32 கோடி ஒதுக்கீடு செய்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வருவதை தொடர்ந்து ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தற்சமயம் சில அதிரடி திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது.

tamilnadu

மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009-ன் கீழ் 13 புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்க மத்திய அமைச்சரவை ரூ. 3,639.32 கோடி ஒதுக்கீட்டு செய்துள்ளது. 

இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, ஒரிசா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மத்தியப் பல்கலைக்கழகமும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களும் புதிதாகத் தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 



 

பல்கலைக்கழக வளாகத்தின் கட்டமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசின் நிதி செலவழிக்கப்படும் எனவும் 36 மாதங்களில் இந்தப் பல்கலைக்கழகங்கள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.