தாஜ்மஹாலில் அனுமதியின்றி நுழைந்த வெளிநாட்டவர்; ஆக்ராவில் பரபரப்பு..!!

தாஜ்மஹாலில் அனுமதியின்றி நுழைந்த வெளிநாட்டவர்; ஆக்ராவில் பரபரப்பு..!!



tajmahal---akra---torist-place

தாஜ்மஹாலில் சீன சுற்றுலாப் பயணி ஒருவர் ட்ரோன் ஒன்றுடன் பாதுகாப்பு வளையத்தை மீறி அனுமதியின்றி உள்ளே நுழைந்ததால் பாதுகாப்பு படை வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். 

மொகலாய மன்னர் ஷாஜஹனால் அவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது தாஜ்மஹால். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. இது உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலுக்கு வருகை தந்து அதன் அழகை ரசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சீனாவிலிருந்து வந்த ஒரு சுற்றுல பயணி கட்டுப்பாடுகளை மீறி தன்னுடன் ட்ரோன்  ஒன்றையும் எடுத்துக்கொண்டு தாஜ்மஹாலின் ராயல் கேட் பகுதிக்கு வந்தார். இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுற்றுலாத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.