நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அனுமதி! மகிழ்ச்சியில் உள்ளூர் பக்தர்கள்!Swami dharisanam allowed to thirumala temple

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவியதால் மார்ச் மாதம் முதல், பள்ளி கல்லூரிகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மூடப்பட்டது. இந்தநிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் சில தளர்வுகளுடன் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

thirumala

இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்கள் மட்டும் 6 அடி இடைவெளியில் தரிசனம் செய்யலாம் எனவும், மேலும் திருப்பதி கோவிலில் தனிநபர் இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் ஆந்திரா பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.