அரசியல் இந்தியா

சுஷ்மா ஸ்வராஜ் பதிவிட்ட கடைசி ட்விட்!! கண்ணீர் சிந்தும் பாஜகவினர்!

Summary:

Sushma swaraj last twit

முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நல குறைவால் தனது 67 வயதில் நேற்று காலமானார். கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த சுஷ்மா ஸ்வராஜின் உடல்நிலை மிக மோசமானதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மரணம் குறித்து தகவலறிந்த, மத்திய அமைச்சர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். சுஷ்மா ஸ்வராஜின் இந்த திடீர் மரணம் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு பல்வேரு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் பதிவிட்ட கடைசி டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. அவரது ட்விட்டர் பக்கத்தில் "பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்து வந்த தருணம் தற்போது நிஜமாகியுள்ளது. இதற்காக தான் நான் காத்திருந்தேன்” என சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டிருந்தார்.


Advertisement