அரசியல் இந்தியா

இதற்காகத்தான் காத்திருந்தேன்.! முன்னாள் மத்திய அமைச்சர் வெளியிட்ட உருக்கமான கடைசி பதிவு!!

Summary:

sushma sivaraj last tweet about kashmir

முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சிவராஜ் உடல்நல குறைவால் தனது 67 வயதில் காலமானார். கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவில் அவதிப்பட்டு வந்த சுஷ்மா சிவராஜ் நேற்று உடல்நிலை மிக மோசமானதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சுஷ்மா சிவராஜ்  உடல் நல பாதிப்பால்  அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார்.

இந்நிலையில் அவரது இந்த திடீர் மரணம் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மா சிவராஜின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்திரா காந்தியை அடுத்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ். இவர் கடைசியாக தான் இறப்பதற்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில், நன்றி பிரதமர். மிக்க நன்றி. என் வாழ்நாளில் இதை காணத்தான் காத்திருந்தேன் என்று காஷ்மீர் விவகாரம் குறித்து பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது. 


 


Advertisement