இந்தியா

ஊரடங்கில் தனது செல்லமகளுடன் கிரிக்கெட் விளையாடும் சின்ன தல ரெய்னா! லைக்குகளை அள்ளும் வீடியோ!

Summary:

Suresh raina play cricket with daughter

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவிவருகிறது. மேலும் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவிய நிலையில் தற்போது 5000க்கும்  மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 150பேர்  உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் கொரோனா  பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும சமூக விலகலை பின்பற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சின்ன தல சுரேஷ் ரெய்னா வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் ஆடியுள்ளார். அவருடன் அவரது மகள் கிரேசியாவும் உள்ளார். மேலும்  அவர்களுடன் மற்றொரு குட்டிப் பையனும் விளையாடுகிறான். சுரேஷ் ரெய்னா பந்து வீச அந்த சிறுவன் பேட்டிங் செய்கிறான். மேலும் ரெய்னா மகள் கார்சியா அம்பயராக உள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். 


Advertisement