ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!



supreme court judgement

பாதுகாப்புப்படைகளில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், உயர் பதவியில் பெண்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தனர்.

பாதுகாப்புப்படைகளில் பெண்களுக்கு முழுமையான பணிச் சேவை வழங்குவது தொடர்பான வழக்கில், ராணுவத்தில் பெண்களுக்கு ஏன் கமாண்டர் பதவி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. ‌

பாதுகாப்புப்படைகளில் , ஆண்களின் உடல் வலிமைக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியாது என்று மத்திய அரசு பதில் அளித்தது. இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் பதிலை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். ஆனால் பெண்கள் கமா‌ண்டர்களாக பணியாற்றலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ராணுவத்தில் பெண்களை கமாண்டராக நியமிக்கவும், நிரந்தர பதவி வழங்கவும் உச்ச நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதன் மூலம் பெண்களை மத்திய அரசு அவமதித்துள்ளதாக ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.