#Breaking வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம்! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யக்கூடாது என்ற முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது உச்ச நீதிமன்றம். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்த உடனே வழக்கு பதிவு செய்து கைது செய்யலாம் என தீர்ப்பளித்துள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது செய்யக் கூடாது என்றும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்றும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த தீர்ப்பை வழங்கி இருந்தது.
இதனையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரீசிலனை செய்யக் கோரி மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அந்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின் சில அம்சங்களை திரும்ப பெறுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் முன்ஜாமின் மற்றும் ஜாமின் வழங்குவது குறித்து வழக்கின் தன்மையை பொறுத்து நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.