தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்த 3 மாணவர்கள் உடல் சிதறி பலி: இன்ஸ்டா வைரல் மோகத்தால் சோகம்.!Student dead by train accident during insta reels

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முசிதாபாத் மாவட்டம், சுதி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் மீது சம்பவத்தன்று 5 பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாக தெரிய வருகிறது. 

அப்போது அவ்வழியாக ரயில் வந்த நிலையில், மூவர் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த இவர்களின் இரண்டு நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Latest news

உயிரிழந்தவர்கள் அமாவ் ஷேக் (வயது 14), ரியாஷ்ஷேக் (வயது 15), சம்யுன் ஷேக் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தண்டவாளத்தில் இருந்தபடி ரீல்ஸ் செய்த போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தனர். 

ரயில் ஓட்டுநர் அவர்களை அங்கிருந்து செல்ல கூறி எச்சரிக்கை ஒலி எழுப்பியும் பலன் இல்லை. ரீல்ஸ் மோகத்தில் தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலர் செய்யும் விஷயங்கள் உயிரை பறிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது.