செம கெத்து.. சிங்கத்தையே எதிர்த்து நின்று ஓடவிட்ட நாய்.. வைரல் வீடியோ காட்சி..



Street dog fight with lion viral video

சிங்கத்தை எதிர்த்துநின்று சண்டையிடும் நாய் ஒன்றின் வீர சாகச வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக வீரத்திற்கு அடையாளமாக சிங்கத்தை குறிப்பிடுவது வழக்கம். அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. சிறப்பான ஒரு சம்பவத்தை செய்யும்போது சிங்கம்டா நீ என அனைவரும் புகழ்வது வழக்கம். அதற்கு காரணம் சிங்கத்தின் தனித்துவமான திறமையும், எதிர்த்து போராடும் அதன் குணமும்தான் காரணம்.

அதேபோல் பெரிய பெரிய காட்டு விலங்குகள் கூட சிங்கத்தை கண்டால் தலைதெறிக்க ஓடுவது வழக்கம். ஆனால் அப்பேற்பட்ட சிங்கம் ஒன்றை தெருநாய் ஒன்று எதிர்த்துநின்று சண்டையிட்டு சிங்கத்தை விரட்டியடிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான பிரவீன் கஷ்வான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது. துணிச்சல் மிக்க அந்த நாயின் செயலை கண்ட அனைவரும் அந்த நாயின் வீரத்தையும், துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.