இந்தியா

பள்ளியிலிருந்து அவசர அவசரமாக தூக்கிச்சென்று 7 வயது சிறுமியை கொன்ற கொடூரதாய்! வெளியான திடுக்கிடும் காரணம்!

Summary:

step mother killed 7 year child

ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகில் உள்ள பகடாலபேட்டை பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சத்யவேணி. இவர்களுக்கு தீப்திஸ்ரீ என்ற 7வயது மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சத்தியவேணி உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து சதீஷ் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில் தனக்கு குழந்தை பிறக்கும்வரை தீப்தியை நன்றாக பார்த்துக் கொண்ட சாந்தகுமாரி பின்னர் குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து சதீஷின் தாய் தீப்தியை தன்னுடன் அழைத்துச் சென்று படிக்க வைத்து வந்துள்ளார். இந்நிலையில் குழந்தையை வளர்ப்பதற்காக சதீஷ் அவரது தாய்க்கு மாதாமாதம்  பணம் கொடுத்து வந்துள்ளார். மேலும் இதற்காகவும்  சாந்தகுமாரி, சதீஷ்குமாரிடம் சண்டை போட்டு வந்துள்ளார். 

 

இதற்கிடையில் தீப்தி ஏராளமான டிக்டாக் வீடியோகளைச் செய்து பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் தீப்தி மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த சாந்தகுமார், கணவர் தொடர்ந்து பணம் அனுப்பியதால் மேலும் கோபம் அடைந்துள்ளார். 

இந்நிலையில் தீப்தியின் பள்ளிக்குச் சென்று அவரை அவசர அவசரமாக தூக்கி சென்ற அவர் அங்குள்ள ஏரிக்கரைக்கு அருகே குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தூக்கி வீசிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற தனது பேத்தியை காணாமல் தீப்தியின் பாட்டி மற்றும் அவரது அப்பா ஆகியோர் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர தேடலின்போது தீப்தி சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் சாந்தகுமாரி தீப்தியை தூக்கி செல்வது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement