இந்தியா

கொரோனோவால் அதிக ஆபத்து மிக்க நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்ப்பு..! இலங்கை அரசு அறிவிப்பு.!

Summary:

Srilanka listed chennai is dangerous city due to corono

கொரோனாவின் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் தவித்துவருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடூர வைரசுக்கு இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனனர். கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து இலங்கை திரும்பிய நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ள நிலையில், அந்நாடு சென்னையை மிகவும் ஆபத்து மிக்க நகரங்களின் பட்டியலில் ஒன்றாக அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா பாதித்திருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

எனவே, கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கை திரும்பியவர்களின் விவரங்களை தாமாகவே முன்வந்து அரசிடம் தெரிவிக்கும்படி அந்நாடு உத்தரவிட்டுள்ளது.


Advertisement