இந்தியா

ஒரே மருத்துவமனையில் இருந்தும் தந்தையின் உடலை கடைசியாக ஒருமுறை பார்க்க முடியாத மகன்.! சோக சம்பவம்.!

Summary:

Son unable see father dead body even in same hospital

கொரோனா காரணமாக மகனும், தந்தையும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதே மருத்துவமனையில் இருந்தும் தந்தை இறந்த பிறகு அவரது முகத்தை கூட மகனால் பார்க்க முடியாத சோகம் டெல்லியில் நடந்துள்ளது.

கடலுார் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்த, 69 வயதான தந்தையும், அவரது 45 வயது மகனும் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்ற நிலையில், ஊரடங்கு காரணமாக அங்கையே தங்கியுள்ளனர். இதனிடையே கொரோனா சந்தேகத்தின் பேரில் இருவரும் டெல்லியில் உள்ள தீன் தயாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், 69 வயதான தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை நடைபெற்றது. பின்னர் உடல்நிலை மோசமானதை அடுத்து கடந்த 9-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். தந்தை உயிர் இழந்த விஷயம் மறுநாள் காலை அவரது மகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனும் தீவிர கண்காணிப்பில் இருப்பதால், தந்தையை பார்க்க மகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விருத்தாச்சலதில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் அவரது உடல் டெல்லியிலையே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தந்தையின் உடல் அருகில் இருந்தும் அவரது மகனால் பார்க்க முடியாமல் போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement