அம்மா எழுந்திரிமா..! பசியால் இறந்துபோன தாயை எழுப்பிய குழந்தை..! பார்ப்போரை கண்கலங்க வைக்கும் காட்சி..!Son try to wake up his dead mother video goes viral

இறந்துபோன தனது தாயை குழந்தை ஒன்று எழுப்ப முயற்சி செய்யும் வீடியோ காட்சி பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வேலை இழந்து தவித்துவருகின்றனர். வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற புலம்பெயர் தொழிலார்கள் வேலை இழந்து, சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலையில் நடந்தும், கிடைக்கும் வாகனங்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஆமதாபாத்தில் இருந்து கதிஹார் செல்லும் சிறப்பு ரயில் முஸாபர்பூர் அருகே சென்றபோது தனது குழந்தையுடன் ரயிலில் பயணித்த பெண் ஒருவர் இறந்துவிடுகிறார். இதனை அடுத்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக முஸாபர்பூர் ரயில் நிலையத்தில் உடல் இரக்கப்பட்டு, ரயில்வே நடைமேடையில் ஒரு போர்வையை போர்த்தி உடல் வைக்கப்பட்டது.

தனது தாயின் மீது போர்வை போர்த்தியிருப்பதை பார்த்த அவரது மகன், தனது தாய் தூங்கிகொண்டுருக்கிறார் என நினைத்து, போர்வையை விலக்கி, அம்மா எழுந்திரிம்மா, அம்மா எழுந்திரிமா என இறந்துபோன தனது தாயை எழுப்ப முற்சி செய்துள்ளான். இந்த காட்சி அங்கிருந்த சிலரால் வீடியோவாக எடுக்கப்பட்டநிலையில் தற்போது அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.

குறித்த பெண் கடந்த சில நாட்களாக உடல்நிலையில் சரியில்லாமல் இருந்ததால் இறந்துவிட்டதாக முஸாபர்பூர் மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. ஆனால், அந்த பெண் கடந்த மூன்று நாட்களாக உணவு இல்லாமல், பசியாலும், வெய்யிலின் தாக்கத்தாலும் இறந்ததாக அந்த பெண்ணின் உறவினர்கள் கூறியுள்ளனர்.