நடு ரோட்டில் கதறி துடித்த தாய்! நடிகையை பார்த்த குஷியில் மகன் செய்த காரியம்!
நடு ரோட்டில் கதறி துடித்த தாய்! நடிகையை பார்த்த குஷியில் மகன் செய்த காரியம்!

கேரளா மாநிலத்தில் நடிகையை பார்த்த குஷியில் பெற்ற தாயை மகன் நடுரோட்டில் தவிக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் மலையின் கீழ் அருகே உள்ள விளவூர்க்கல் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞர் நவீன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் தனது 66 வயதான தாயை அழைத்துக்கொண்டு ஓய்வூதியம் வாங்குவதற்காக அருகில் உள்ள அலுவலகம் சென்றுள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள கோவிலில் நடிகை மஞ்சு வாரியர் ஷூட்டிங் வந்திருப்பதாக நண்பர் ஒருவர் நாவினுக்கு தொலைபேசியில் கூறியுள்ளார்.
மஞ்சு வாரியாரின் தீவிர ரசிகரான நவீன் தனது தாயை அலுவலகத்தில் அமரவைத்துவிட்டு ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து நவீன் சென்று நீண்ட நேரமாகியும் வராததால் அவரது தாய் மகனை தேட தொடங்கியுள்ளார். எங்கு தேடியும் நவீன் கிடைக்கவில்லை.
இதனால் ஆட்டோ ஒன்றை வரவைத்து தானே வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால், வீட்டிற்கு செல்லும் வழி அவருக்கு தெரியவில்லை. ஆட்டோ ஓட்டுனரும் பலமுயற்சி செய்ய அவராலும் வீட்டை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் அந்த வயதானை தாயை ஒரு இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதனை அடுத்து அந்த தாய் ரோட்டில் நின்றவாறே அழ தொடங்கியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் அவரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அந்த தாயிடம் இருந்த ஆவணங்களை சோதித்ததில் அவரது மகன் தோலை பேசி எண் இருந்துள்ளது.
அவருக்கு போன் செய்து காவல் நிலையத்திற்கு வரவைத்து விசாரித்ததில் நடிகையை பார்க்கும் ஆர்வத்தில் நவீன் தனது தாயை மறந்து தெரியவந்தது. பின்னர் நவீனை கண்டித்து போலீசார் அவரது தாயை அவரிடம் ஒப்படைத்தனர்.