இந்தியா

#வீடியோ: குஞ்சுகளை விழுங்கவந்த பாம்பு..! போராடி காப்பாற்றிய தாய்க் கோழி..! நடுங்கவைக்கும் வைரல் காணொளி..!

Summary:

#வீடியோ: குஞ்சுகளை விழுங்கவந்த பாம்பு..! போராடி காப்பாற்றிய தாய்க் கோழி..! நடுங்கவைக்கும் வைரல் காணொளி..!

தனது குஞ்சுகளை விழுங்க வந்த பெரிய பாம்பு ஒன்றுடன் போராடி, தனது குஞ்சுகளை காப்பாற்றும் தாய் கோழியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தாய்மை என்பது மிகவும் புனிதனமா ஒன்று. மனிதர்களாக இருந்தாலும் சரி, பறவை, விலங்குகளாக இருந்தாலும் சரி. தங்கள் பிள்ளைகள், தங்கள் குட்டிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் தாய் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைக்க துணிந்துவிடுவாள்.

அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது. பெரிய பாம்பு ஒன்று கோழிக்குஞ்சுகளை விழுங்க முயற்சிக்கும் நிலையில், அந்த பாம்புடன் போராடி தனது குஞ்சுகளை காப்பாற்றுகிறது தாய் கோழி. பார்க்கவே பயங்கரமாக இருக்கும் இந்த வீடியோ காட்சி பழையதாக இருந்தாலும் கூட, தற்போதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement