இந்தியா

தலையில் தொங்கிய வால்! ஹெல்மெட்டை கழற்றி பார்த்த ஆசிரியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அலறவைக்கும் சம்பவம்!

Summary:

snake found in teacher helmet at kochi

கொச்சி அருகே வசித்து வருபவர் ரஞ்சித். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் ரஞ்சித் சமீபத்தில் காலை 8 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் சுமார்11 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்ற நிலையில், அவரது தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டில் இருந்து வால் போன்ற ஏதோ ஒன்று தென்பட்டுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு,  தனது ஹெல்மெட்டை கழற்றி பார்த்துள்ளார். அப்பொழுது ஹெல்மெட்டின் உள்ளே காமன் கிரெய்ட் என்று அழைக்கப்படும் விஷப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. மேலும் அது ரஞ்சித்தின் தலையால் நசுக்கப்பட்டு இறந்துகிடந்துள்ளது. 

 இதுகுறித்து அவர் தனது நண்பர்களிடம் கூறிய நிலையில், பதறிப்போன அவர்கள் அவரை அனைத்து பரிசோதனையும் மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரஞ்சித்தை பாம்பு கடிக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.

 மேலும் இதுகுறித்து ரஞ்சித் கூறுகையில், எனது வீட்டிற்கு அருகே குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் இருந்து இந்த பாம்பு எனது ஹெல்மெட்டில் ஏறி இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் ஆனால் நான் ஹெல்மெட்டைஅணியும் போது எதனையும் உணரவில்லை என கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement