இந்தியா

அதிக விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு..! பாத்ரூம் மூலையில இருந்துச்சு..! பிடிச்சு பைக்குள் போட்டபிறகு காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

Snake delivers 35 cubs while rescuing it

கோவை கோவில்மேடு திலகர் வீதி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் நேற்று காலை வீட்டின் குளியலறைக்கு சென்றபோது பாம்பு ஒன்று அந்த பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் முரளி எனபவருக்கு தகவல் கொடுத்து அவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

மனோகரனின் வீட்டிற்கு வந்த முரளி அங்கு பதுங்கி இருந்த அதிக நச்சு தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து தான் கொண்டுவந்த பைக்குள் போட்டுள்ளார். பின்னர் அதனை வனப்பகுதிக்கு எடுத்து சென்றபோது பாம்பு தொடர்ச்சியாக குட்டிபோட்ட ஆரம்பித்துள்ளது.

பாம்பு இருந்த பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு காத்திருந்த முரளி, சுமார் இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தபோது அந்த பாம்பு சுமார் 35 குட்டிகளை ஈன்றுள்ளது. இதனை அடுத்து பாம்பையும், அதன் குட்டிகளையும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாக முரளி தெரிவித்துள்ளார்.


Advertisement