நாகப் பாம்பை வெறும் கையால் பிடித்த இளைஞர்..! கொத்திய பிறகும் விடாத துயரம்..! பரிதவிக்கும் இரண்டு பிஞ்சு குழந்தைகள்.!

நாகப் பாம்பை வெறும் கையால் பிடித்த இளைஞர்..! கொத்திய பிறகும் விடாத துயரம்..! பரிதவிக்கும் இரண்டு பிஞ்சு குழந்தைகள்.!



Snake catcher bitten by cobra dies in TVM at kerala

கேரளாவில் வெறும் கைகளால் நாக பாம்பை பிடித்த இளைஞர் அதே பாம்பு சீண்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரதை அடுத்த சாஸ்தவட்டோம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவருக்கு திருமணம் முடிந்து ஹசீனா என்ற மனைவியும், நேகா மற்றும் நிஹா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 11 ஆண்டுகளாக பாம்பு பிடிப்பதை தொழிலாக செய்துவந்துள்ளார் ஜாகிர் உசேன்.

இதுவரை 348 பாம்புகளை பிடித்துள்ள ஜாகிர் உசேன், 12 முறை பாம்புகளால் கொத்தப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் நாவைகுளம் என்ற பகுதியில் பாம்பு பிடிக்க வருமாறு ஜாகிர் உசேனுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து தனி ஆளாக அங்கு சென்ற ஜாகிர் உசேன் இரவு 8.30 மணி அளவில் அந்த பாம்பை பிடித்துள்ளார்.

நாக பாம்பை வெறும் கைகளால் பிடித்து ஜாகிர் உசேன் மேலே தூக்கும்போது அந்த பாம்பு அவரை சீண்டியுள்ளது. பாம்பு சீண்டியும் அசராமல் நின்ற ஜாகிர் உசேன், சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்துள்ளார். இதில் அவரது கையில் இருந்த பாம்பு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் ஜாகிர் உசேன்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜாகிர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.