
Summary:
தன்னை கடித்த பாம்பை பழிவாங்குதற்காக, விவசாயி ஒருவர் அந்த பாம்பை திருப்பி கடித்தே கொன்ற சம்
தன்னை கடித்த பாம்பை பழிவாங்குதற்காக, விவசாயி ஒருவர் அந்த பாம்பை திருப்பி கடித்தே கொன்ற சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் பத்ரா என்பவர் வயலில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் ஏதோ கடித்தது போல இருந்தது. உடனே தன்னிடம் இருந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்த்த போது பாம்பு ஒன்று கடித்துவிட்டு வேகமாக ஓடியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அந்த பாம்பை விரட்டிச்சென்று கம்பினால் அடித்தும், பின்னர் தனது வாயினால் கடித்தும் கொன்றுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
Advertisement
Advertisement