அடபாவமே..நாகப்பாம்பை பிடிக்க சென்ற நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பார்ப்போரை நடுநடுங்க வைத்த வீடியோ!!Snake attacked man who try to catch snakes

பாம்பென்றால் படையும் அஞ்சும் என்பர். சமீபகாலமாக பாம்பு குறித்த ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் பாம்பு குறித்த பயமே இல்லாமல் அதனை பிடிப்பது, தங்களது மேலே போட்டுக்கொண்டு புகைப்படம் எடுப்பது என ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நபர் ஒருவர் நாகப்பாம்பு ஒன்றை பிடிக்கச் சென்றபோது அது அவரைத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹாவேரி மாவட்டம் ஷிகாவி தாலுகாவில் லேட் என்ற கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று அமைந்துள்ளது. அங்கு செங்கற்களுக்குள் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது.

அதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கிய நிலையில், ராஜு கவுரி என்பவர் தைரியமாக அந்தப் பாம்பை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அது அவரை தீண்டியுள்ளது. இந்த நிலையில் அங்கிருந்தவர்கள் விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையில் ராஜு கவுரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் பாம்பு பிடித்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்த நிலையில் அது வைரலாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.