இந்தியா லைப் ஸ்டைல்

வீடியோ: நாய்போல் ஊளையிடும் வினோத பாம்பு!! பார்க்கும்போதே பயங்கரமா இருக்கு.. வைரல் வீடியோ இதோ..

Summary:

தெலுங்கானாவில் பாம்பு ஒன்று நாய் போல் ஊளையிடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருக

தெலுங்கானாவில் பாம்பு ஒன்று நாய் போல் ஊளையிடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ராமடுகு என்ற இடத்தில் பாம்பு ஒன்று சத்தம் எழுப்புவதும், நாய்போன்று ஊளையிடும் வீடியோ காட்சி பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அங்குள்ள தைலமர காட்டில் இந்த பாம்பு தென்பட்டதாகவும், பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமாக இருக்கும் இந்த பாம்பு நாய் போன்று ஊளையிடுவதாகவும் இந்த வீடியோ காட்சி வைரலாகிவருகிறது.

ஆனால் இது உண்மையான பாம்புதானா? அல்லது யாரேனும் கிராபிக்ஸ் செய்து இதுபோன்ற வீடியோவை இணையத்தில் பரப்பி விட்டனரா என்பது குறித்து தற்போது வனத்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். இதனிடையே இந்த பாம்பு ஊளையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பார்ப்போரை அச்சமடையவைத்துள்ளது.


Advertisement