கேரளாவில் அதிர்ச்சி.. தனது சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

கேரளாவில் அதிர்ச்சி.. தனது சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!


Shock in Kerala.. Father who made his own daughter pregnant.. Court gave action verdict..!

கேரளாவில் மலப்புறம் பகுதியில் திருக்குர்ஆன் மற்றும் அரபி மொழியை பயிற்றுவிக்கும் மதராஸா பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் குடிக்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது.

மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அவரது மகள் வீட்டிலிருந்தே இணையம் வழியாக கல்வி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள்  குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அவர் வீட்டில் தனியாக இருந்த தனது மகளை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் உன் தாயை கொன்று விடுவேன் என்று மிரட்டி கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

KERALA

இதனையடுத்து கடந்த ஆண்டு சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாய் சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.  இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியிடம் விசாரிக்கவே அவர் ஒன்றும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார். மேலும் அந்த குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் சிறுமியை கர்ப்பம் ஆக்கியது அவரது தந்தை என தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சிறுமியின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 6.6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.