இந்தியா

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை.! கற்ப்பைக் காப்பாற்றிக் கொள்ள இளம்பெண் செய்த காரியம்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

கேரள மாநிலம் எர்ணாகுளம மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒ

கேரள மாநிலம் எர்ணாகுளம மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் ஏறியுள்ளார். இந்நிலையில் அந்த ரயில் பெட்டியில் பெண் தனியாக இருப்பதை பார்த்த நபர் ஒருவர் அந்த பெண்ணை ரயில் பெட்டியில் உள்ள கழிவறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். 

மேலும் அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக ரயில் பெட்டியின் கதவை திறந்து அப்படியே ரயில் சென்று கொண்டிருக்கும் போதே குதித்துள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் தப்பாக நடக்க முயன்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement