
Sexual harassment of children studying in the ashram
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சுவாமி பக்தி பூஷண் மகாராஜ் என்ற சாமியார் ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு 15 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் படித்து வருகிறார்கள். பெரும்பாலான சிறார்கள் திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இங்கு கல்வி பயல வரும் சிறுவர்கள் பாலியல் கொடுமைகளை அனுபவைத்து வருவதாக புகார் வந்துள்ளது. இதனையடுத்து நடத்திய விசாராணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களிடம் கொரோனாவுக்கு மருந்து தருகிறோம் என கூறி மதுபானங்களை சிறுவர்களுக்கு கொடுத்த பின்பு வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்கின்றனர் என தெரியவந்துள்ளது.
இதனால் 4 பேர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமானது மேலும் சிறுவர்கள் கூறுகையில் , அவர்கள் சொல்கிற படி செய்யவில்லை என்றால் எங்களை கடுமையாக தாக்குவார்கள் எனவும் வேதனையோடு அந்த சிறுவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து ஆசிரமத்தின் சாமியார் உட்பட 2 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement