இந்தியா

பீச் ஒரேமா ஏதோ மின்னுது.. ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அள்ளிக்கொடுத்த கடல்..

Summary:

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடற்கரை ஓரம் தங்க உருண்டைகளை மக்கள் எடுத்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடற்கரை ஓரம் தங்க உருண்டைகளை மக்கள் எடுத்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒரே பகுதி ஒன்றில் சில இடங்களில் தங்கள் போல் ஏதோ மின்னுவதை அந்த பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே இதுகுறித்து அந்த பகுதி மக்களுக்கு தெரியவர, ஊர் மக்கள் அனைவரும் கடற்கரையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அங்கு சென்ற மக்கள் சிலருக்கு சிறிய அளவிலான உருண்டை போன்ற வடிவில் தங்கம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று சுமார் 50 கும் அதிகமானோர் கடற்கைரையில் இருந்து சுமார் மூன்று ஆயிரம் முதல் நான்கு ஆயிரம் மதிப்பிலான தங்க துகள்களை எடுத்தாக கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள போலீசார், "அந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான வீடுகள், கோவில்கள் போன்றவரை கடல் நீர் அரித்துவிட்டதாகவும், சுமார் 150 ஏக்கர் அளவிலான நிலம் கடந்த 20 ஆண்டுகளில் கடல் நீருக்குள் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பகுதிகளில் கட்டப்பட்டிருந்த கோவில்கள், சில வீடுகளில் பூமி பூஜையின் போது சிறிய அளவிலான தங்கத்தை அடித்தளத்தில் போட்டு பணிகளை தொடங்கியிருப்பார்கள் என்றும், அந்த கட்டிடங்கள் கடல் நீரால் அரிக்கப்படும் போது தற்போது அவை வெளியே வந்திருக்கக் கூடும்". என தெரிவித்துள்ளனர்.

தங்கத்தை தேடி கடற்கரை ஓரம் தேடிக்கொண்டிருந்த சிலருக்கு தங்கம் கிடைத்தநிலையில், தங்களுக்கும் கிடைக்கும் என பலர் அந்த பகுதியில் தங்கத்தை தேடி வருகின்றனர். 


Advertisement