ஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் கலெக்டர் ஆன பள்ளி மாணவி..! குவியும் வாழ்த்துக்கள்..!

ஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் கலெக்டர் ஆன பள்ளி மாணவி..! குவியும் வாழ்த்துக்கள்..!


School girl appointed as one day collector in maharashtra

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் முதல்வன். இந்த படத்தில் ஒருநாள் முதல்வர் என்ற கதாபாத்திரம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில், ஒருநாள் முதல்வர்போல், ஒருநாள் மாவட்ட ஆட்சியர் என பள்ளி மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அரசு பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவரை தேர்வு செய்து, அவரை ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பணி அமர்த்தியுள்ளது மஹாராஷ்டிரா அரசு.

மஹாராஷ்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவரை ஒருநாள் ஆட்சியராக அமர்த்தியதன் மூலம், பெண்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் எனவும், நிர்வாகம் குறித்து பெண்கள் மேலும் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார் புல்தானா மாவட்ட ஆட்சியர்.