மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.! 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு.!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.! 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு.!


school-close-for-corona-in-up

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதனால் இந்தியாவில் சமீப காலமாக கொரோனா பரவல்  குறைந்து வந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளுமாறு அணைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடும்படி பல்வேறு மாநில அரசுகளும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

corona

மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கிற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆதித்யநாத் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.  

அந்த கூட்டத்தில், 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் நாளை முதல் வருகிற 31ந்தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அதேபோல், தேர்வுகள் நடைபெறாத பிற அனைத்து கல்வி நிலையங்களும் வருகிற 25 ஆம் தேதி முதல் 31ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.