பெரும் அதிர்ச்சி.. போலியோ சொட்டுமருந்துக்கு பதில் குழந்தைகளுக்கு சானிடைசர்.. 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..

பெரும் அதிர்ச்சி.. போலியோ சொட்டுமருந்துக்கு பதில் குழந்தைகளுக்கு சானிடைசர்.. 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..


Sanitizer given to babies instead of polio drops

மஹாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து நேற்று வழங்கப்பட்டுவந்தநிலையில் மகராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் யவத்மாலில் போலியோ சொட்டுமருந்து போடுவதற்காக வந்த 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்துக்கு பதிலகா சானிடைர் போடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 12 குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ஒருவர் மற்றும் இரண்டு பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.