இந்தியா விளையாட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சச்சின் கொடுத்துள்ள உதவி தொகை..! எத்தனை லட்சம் தெரியுமா.?

Summary:

Sachin donated 50 lakhs to fight against corono

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை கட்டுப்படுத்தவும், கொரோனா நோயாளிகளை குணப்படுத்தவும் அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனோவை கட்டுப்படுத்த மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் போராடிவருகிறது.

இந்நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த தங்கள் மக்களுக்கும், அரசுக்கும் உதவும் வகையில் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் பல்வேறு பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சமும், மகாராஷ்டிர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார் சச்சின். உலகளவில் உள்ள விளையாட்டு அமைப்புகள் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement